×

தஞ்சாவூரில் கராத்தே மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

 

தஞ்சாவூர், ஆக. 29: தஞ்சாவூரில் கராத்தே மாணவர்களுக்கு தகுதி தேர்வு, பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. கிங்கு ஷிட்டோரிரியு ஸ்போர்ட்ஸ் கராத்தே டு இந்தியா சார்பில், கடந்த ஆறு மாதங்களாக பயிற்சி பெற்று மாணவர்களுக்கு நேற்று அதற்கான தகுதி தேர்வும், பாராட்டுச் சான்றிதழ், விருது வழங்கும் விழா நடைபெற்றது.விழாவில் தஞ்சாவூர் நகரில் உள்ள 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதையடுத்து வெள்ளை, மஞ்சள், ஆரஞ்ச், பச்சை, ஊதா, கருப்பு உள்ளிட்ட பெல்ட்டுகளை மாணவர்களுக்கு வழங்கி அடுத்த தகுதிக்கு தயாராகினர்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற விழாவுக்கு தலைமைப் பயிற்றுநர்கள் எஸ்.அன்பரசன், ஆப்ரஹாம் ஆகியோர் தலைமை வகித்தனர். விழாவில் தூய மரியன்னை மெட்ரிக் பள்ளி தாளாளர் லாரன்ஸ், பங்கு தந்தை சாலமன், பேராசிரியர் சங்கரன், ஆசிரியர்கள் ரமேஷ், கலா, ஏங்கிஸ் பிரமிளா, கஸ்தூரி திலகம் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினர். இதில் மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூரில் கராத்தே மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Dinakaran ,
× RELATED வாடகைவீட்டில் தங்கி குற்றச்செயலில்...