×

டோக்கியோ பாரா ஒலிம்பிக் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் தங்கம் வென்ற அவனிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

டெல்லி: டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற அவனிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்து உள்ளார். மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா அதிரடியாக விளையாடி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.  இதனால், அவர் இந்தியாவுக்கு கூடுதலாக ஒரு பதக்கம் பெற்று தருவாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்திய வீராங்கனை அவனி லெகாரா, மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதி போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரை சேர்ந்த அவர் போட்டியில் 249.6 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்துள்ளார்.  இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கம் பெற்று தந்து அவனி லெகாரா வரலாறு படைத்து உள்ளார். இந்திய பாராஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தீபா மாலிக், பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.  டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியில் வரலாறு படைத்ததுடன், தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனை படைத்ததற்காக வாழ்த்துகள் என ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். உங்களுடைய சிறந்த செயல்பாட்டால் இந்தியா உற்சாகம் அடைந்து உள்ளது.  நீங்கள் படைத்த அற்புத சாதனையால், மேடையில் நமது மூவர்ண கொடி உயர பறக்கிறது என ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.  பாராலிம்பிக்ஸ் துப்பாக்கிச் சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் அவனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். துப்பாக்கிச்சுடுதலில் உங்களுக்கு உள்ள ஆர்வம் மற்றும் திறமை காரணமாக வெற்றி கிடைத்துள்ளது என குறிப்பிட்டார். இந்திய விளையாட்டுத் துறையில் இது ஒரு சிறப்பான தருணம் என பிரதமர் மோடி அவணிக்கு புகழராம் செய்தார். …

The post டோக்கியோ பாரா ஒலிம்பிக் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் தங்கம் வென்ற அவனிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : President ,Ram Nath Kovind ,Avani ,Tokyo Para Olympics 10m air rifle event ,Delhi ,Tokyo Para Olympics ,Ramnath Kovind ,Tokyo Para Olympics 10m air rifle ,Dinakaran ,
× RELATED திருவான்மியூரில் போதையில் தகராறு;...