×

டெல்லி 2 , கொல்கத்தா 3 , மும்பை 5, சென்னை 7: சர்வதேச அளவில் அதிக வெப்பத்தை வெளியிடும் நகரங்களின் பட்டியலில் 4 இந்திய நகரங்கள்!!

சென்னை : சர்வதேச அளவில் அதிக வெப்பத்தை வெளியிடும் நகரங்களின் பட்டியலில் சென்னை 7வது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் டெல்லி 2ம் இடத்திலும் கொல்கத்தா 3ம் இடத்திலும் மும்பை 5ம் இடத்திலும் உள்ளது. தெற்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்ரிக்காவில் சில நகரங்களில் வெப்பத்தை வெளியிடுவது வேகமாக அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த பட்டியலில் வங்கதேச நாட்டின் தலைநகர் தாக்கா முதல் இடத்தில் உள்ளது. தாய்லாந்து நாட்டின் தலைவர் பாங்க்டாக் 4ம் இடத்தில் உள்ளது. காலநிலை மாற்றமும் நகரங்களில் மக்கள் தொகை வேகமாக அதிகரிப்பதுமே இதற்கு முக்கிய காரணிகளாக உள்ளது. அதிக வெப்பத்தை வெளியிடும் 50 நகரங்களில் இந்தியாவிலேயே 17 நகரங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. ….

The post டெல்லி 2 , கொல்கத்தா 3 , மும்பை 5, சென்னை 7: சர்வதேச அளவில் அதிக வெப்பத்தை வெளியிடும் நகரங்களின் பட்டியலில் 4 இந்திய நகரங்கள்!! appeared first on Dinakaran.

Tags : Delhi 2nd ,Kolkata 3rd ,Mumbai 5th ,Chennai 7th ,Chennai ,Delhi ,Delhi 2 ,Kolkata ,Mumbai ,
× RELATED பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி