×

பெரியகரம் கிராமத்தில் ஏரி ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்

* வருவாய்த்துறையினர் நடவடிக்கை

போளூர் : பெரியகரம் கிராமத்தில் உள்ள ஏரி ஆக்கிரமிப்புகளை வருவாய் துறையினர் அதிரடியாக அகற்றினர். போளூர் தாலுகாவில் உள்ள பெரும்பாலான ஏரிகள் மற்றும் நீர்வரத்து பாசனக் கால்வாய்களை அந்த பகுதியில் உள்ள சிலர் ஆக்கிரமித்து இருந்தனர். இதனை அப்புறப்படுத்த வேண்டும் என அடிக்கடி விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கூறி வந்தனர்.

இந்நிலையில் போளூர் வட்டம், பெரியகரம் கிராமத்தில் உள்ள ஏரியில் விவசாயிகள் சிலர் 9 ஏக்கர் அளவிற்கு நிலத்தை  ஆக்கிரமித்து நெல், மணிலா, கம்பு போன்றவற்றை பயிர் செய்து வந்தனர். இதையறிந்த தாசில்தார் எம்.தியாகராஜன் உடனடியாக ஏரியில் ஆக்கிரமித்து வைத்துள்ள பயிரை அகற்ற உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் வருவாய் ஆய்வாளர் ம.தமிழரசி, கிராம நிர்வாக அலுவலர் வி.சுதாகர் ஆகியோர் பொக்லைன் மூலம் ஏரியில் வைக்கப்பட்டிருந்த பயிரை அகற்றினர். அப்போது கிராம நிர்வாக அலுவலர் த.தமிழ்ச்செல்வன், அ.அருள்பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED அமைச்சர் சேகர்பாபு தலைமையில்...