×

டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்

 

தொண்டி, ஜூலை 7: டெங்கு கொசுக்களை உருவாக்கும் டெங்கு புழுக்களை ஒழிக்கும் விதமாக தொண்டி அருகே பாசிபட்டினம் கிராமத்தில் கம்பூசியா மீன் குஞ்சுகள் கிராமத்தில் உள்ள அனைத்து கிணறுகளிலும் விடும் பணி நேற்று நடைபெற்றது. மாவட்ட துணை இயக்குனர் சுகாதார நலப்பணிகள் அர்ஜுன் குமார் உத்தரவின்படி, மாவட்ட மலேரியா அலுவலர் வேலுச்சாமி, வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி தலைமையில் பூச்சியல் அலுவலர் சேக் தாவுது முன்னிலையில் நடைபெற்ற இப்பணியில் 300 கிணறுகளில் 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மீன் குஞ்சுகள் விடப்பட்டது. சுகாதார ஆய்வாளர்கள் சந்தானராஜ், கண்ணன், இளம் பருதி, அருள், முனியசாமி ஆகியோரின் முன்னிலையில் ஒவ்வொரு வீதியாக மருத்துவ பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

The post டெங்கு ஒழிப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Thondi ,Pasipattanam ,Dinakaran ,
× RELATED பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய கோரிக்கை