×

டூவீலர் திருடிய இருவர் கைது

திருச்செங்கோடு, பிப்.6: திருச்செங்கோடு ஆனங்கூர் சாலையில் உள்ள ஒரு மருத்துவமனையில் வேலை செய்து வந்தவர் பவுல்ராஜ் (34). இவர் ஈரோட்டில் வசிக்கும் தனது நண்பர் ஆனந்த் (33) என்பவரை வரவழைத்து, மருத்துவமனை முன்பு நோயாளிகள் நிறுத்தும் வாகனங்களை திருடி வந்துள்ளார். கடந்த வாரத்தில் இரண்டு டூவீலர்களை அவர்கள் திருடினர். வாகன உரிமையாளர்கள் கொடுத்த புகார் மீது வழக்குப்பதிவு செய்த, திருச்செங்கோடு நகர போலீசார் பவுல்ராஜூக்கு உடந்தையாக இருந்து வாகனங்களை திருடியதை கண்டு பிடித்தனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட டூவீலர்களை போலீசார் மீட்டனர். பின்னர் இருவரையும் திருச்செங்கோடு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சுரேஷ்பாபு இருவரையும், 15நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post டூவீலர் திருடிய இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,Paulraj ,Anangur Road ,Anand ,Erode ,
× RELATED பள்ளி அருகே செயல்படும் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு