×

டிரான்ஸ்பார்மரில் ஆயில் காப்பர் காயில் திருட்டு

சேலம், ஜூன் 19: சேலம் காரிப்பட்டி அடுத்த பாலப்பட்டி ஏரியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இங்கு கடந்த 16ம் தேதி, கூட்டாத்துப்பட்டி உதவி மின்பொறியாளர் மதன்குமார் ஒயர்மேனுடன் வந்தார். அப்போது அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில், சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான காப்பர் காயில் இரண்டு, ஆயில் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரிந்தது. இதுபற்றி காரிப்பட்டி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்ஐ சத்தியமூர்த்தி வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார். அந்த பகுதியில் சிசிடிவி மேரா எதுவும் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

The post டிரான்ஸ்பார்மரில் ஆயில் காப்பர் காயில் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Salem ,Transformer ,Lake Balpatti ,Salem Karaipatti ,Madhankumar Yerman ,Dinakaran ,
× RELATED பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்