×

ஜிஎஸ்டி வரியை மறுபரிசீலனை செய்யக்கோரி ஒன்றிய நிதி அமைச்சரிடம் காஞ்சி. பட்டு நெசவாளர்கள் மனு

காஞ்சிபுரம்: சென்னையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை காஞ்சிபுரம் கைத்தறிப்பட்டு ஜரிகை சேலை உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் நேற்றுமுன்தினம் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:ஜிஎஸ்டி வரி உயர்வால் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வரையறுக்கப்பட்ட புதிய ஜிஎஸ்டி முறைப்படி பட்டு உற்பத்தி பொருளுக்கான வரி,‌ விற்பனை மற்றும் இதர சேவை வரி‌ என அனைத்தையும் கூட்டினால் முன்பைவிட 22% அதிக வரி வசூலிக்கும் நிலை உள்ளது. கைத்தறி நெசவு தொழில் நலிவடைந்து வரும் நிலையில் ஜிஎஸ்டி வரி உயர்வால் பட்டு நெசவாளர்கள் குடும்பம் நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே, கைத்தறி நெசவு தொழிலின் ஜிஎஸ்டி வரி உயர்வை மறுபரிசீலனை செய்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், இதுதொடர்பாக மறு ஆய்வு செய்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என‌ கூறினார்….

The post ஜிஎஸ்டி வரியை மறுபரிசீலனை செய்யக்கோரி ஒன்றிய நிதி அமைச்சரிடம் காஞ்சி. பட்டு நெசவாளர்கள் மனு appeared first on Dinakaran.

Tags : Kanji ,Union ,Finance Minister ,Kanchipuram ,Union Finance Minister ,Nirmala Sitharaman ,Chennai ,Kanchi ,Dinakaran ,
× RELATED சிசுவின் பாலினம் தெரியப்படுத்தும்...