×

ஜப்பானில் பல் மருத்துவர்களின் பயிற்சிக்காக உருவாக்கப்பட்ட குழந்தை ரோபோ

ஜப்பான்: ஜப்பானில் பல்மருத்துவர்கள் பயிற்சி பெறுவதற்காக பிரத்யோக ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர். கண்களை உருட்டி கொண்டு குழந்தை போலவே அழுகும் இந்த ரோபோவிற்கு பிடியாராய்டு என்று பெயரிட்டனர். குழந்தைகளுக்கு பல் சிகிச்சை அளிக்கும் போது அவர்களிடம் ஏற்படும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனர். குறிப்பாக சிகிச்சையின் போது வலிப்பு மற்றும் இதய செயலிழப்பு ஆபத்து குறித்தும் இந்த ரோபோ கண்டறிந்து வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் நெருக்கடியான சூழலில் குழந்தைகளை எவ்வாறு கையாளுவது என்று பயிற்சி பெரும் மருத்துவர்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம் என ரோபோவை உருவாக்கிய நிறுவனம் கூறியுள்ளது. இந்த குழந்தை ரோபோவின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஒன்றரை கோடியாக நிர்ணயிக்கபட்டுள்ளது…

The post ஜப்பானில் பல் மருத்துவர்களின் பயிற்சிக்காக உருவாக்கப்பட்ட குழந்தை ரோபோ appeared first on Dinakaran.

Tags : Japan ,Dinakaran ,
× RELATED ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்