×

சொத்துக்காக வெடிகுண்டு வைத்து தாய் கொலை மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சொத்துக்காக தாயை குண்டு வைத்து கொலை செய்த வழக்கில் மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து வெடிகுண்டு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தம்மாள் (74). இவருக்கு மூன்று மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகிவிட்டது. இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். எனவே, முத்தம்மாள் தனியாக வீடு கட்டி அதில் வசித்து வந்தார். இளைய மகன் செல்வகுமார் (42) தன்னை கவனித்துக் கொள்ளாததால் சொத்துக்களை மற்ற மகன் மற்றும் மகள்கள் மீது எழுதி வைத்துள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார்,  பெட்டியைத் திறந்தால் வெடிமருந்து வெடிக்கும் வகையில் உருவாக்கினார். அதனை முத்தம்மாள் வீட்டில்  கடந்த 2016 ஜனவரி 21ம் தேதி திறக்கும்போது அது வெடித்து படுகாயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்துவிட்டார்.  இந்த வழக்கை விசாரித்த வி.களத்தூர் காவல்துறையினர் செல்வகுமார், பூபதி சரவணன், லூகாஸ் அந்தோணி, பால்டப்பா என்கிற மணிகண்டன் ஆகிய 5 பேரை கைது செய்து அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டுகள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு தரப்பில் சிறப்பு குற்றவியல் வழக்குரைஞர் என். விஜயராஜ் ஆஜராகி சாட்சிகளிடம் விசாரித்தார்.  இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.ஹெச். இளவழகன், எதிரி செல்வகுமார் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதமும்  விதித்து தீர்ப்பளித்தார்….

The post சொத்துக்காக வெடிகுண்டு வைத்து தாய் கொலை மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Madras ,Chennai ,Chennai Special Court ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!