×

சேலம் பெரியார் பல்கலை. துணைபதிவாளர் டிஸ்மிஸ்

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தில்  கடந்த 2013ம் ஆண்டு   உரிய அங்கீகாரம் இல்லாத தொழில்நுட்ப படிப்புகள் நடத்தியது, முன்கல்வித்தகுதி அல்லாத வெளிமாநில மாணவர்களை சேர்த்து, படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் வழங்கியது என பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தன.  விசாரணை குழுவின் அறிக்கைஅடிப்படையில்  நடவடிக்கை எடுக்க, கடந்த மாதம் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. அதன்படி தற்போது பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளராக உள்ள ராமன், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராமனை, நிரந்தர பணிநீக்கம் செய்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவிட்டுள்ளார். இதேபோல், தொகுப்பூதிய பணியாளரான அன்பரசியும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். …

The post சேலம் பெரியார் பல்கலை. துணைபதிவாளர் டிஸ்மிஸ் appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,Salem ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் பணி...