×

சேலத்திலிருந்து 20,000 பேர் குடும்பத்துடன் பங்கேற்பு

 

சேலம், மே 4: ஈரோட்டில் நாளை நடக்கும் வணிகர் உரிமை முழக்க மாநாட்டில், சேலத்திலிருந்து 20 ஆயிரம் வணிகர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்வது முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்டத்தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் வர்க்கீஸ், இளையபெருமாள், பொருளாளர் சந்திரதாசன், மாநிலத்துணைத்தலைவர் சியாமளநாதன், துணைத்தலைவர்கள் ராஜேந்திரன், பொன்னுசாமி, இணை செயலாளர்கள் திருமுருகன், சுந்தர்ராஜ், தங்கவேல், மாவட்ட இளைஞரணி பெனின் ஜாக்சன், காளிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நாளை (மே 5ம்) தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் 40வது மாநில மாநாடு ‘வணிகர் உரிமை முழக்க மாநாடாக’ மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் ஈரோட்டில் டெக்ஸ்வேலி மைதானத்தில் நடக்கிறது. இம்மாநாட்டில், சேலம் மாவட்டத்தில் இருந்து 60க்கும் மேற்பட்ட சங்கங்களிலிருந்து சுமார் 20 ஆயிரம் வணிகர்கள், குடும்பத்துடன் கலந்து கொள்ள உள்ளனர். மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கு விடுமுறை அளித்து, மாநாட்டில் கலந்து கொள்வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post சேலத்திலிருந்து 20,000 பேர் குடும்பத்துடன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,rights ,Erode ,Dinakaran ,
× RELATED நில அளவை செய்யவிடாமல் தடுப்பதாக மாற்றுத்திறனாளி புகார்