×

சேறும் சகதியுமாக மாறிய புல் மைதானம்-சுற்றுலா பயணிகள் செல்ல தடை

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் சில மணி நேரம் கன மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா புல் மைதானங்கள் சேறும் சகதியுமாக மாறிவிட்டன. இதில், சுற்றுலா பயணிகள் அமரவோ அல்ல விளையாடவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது புல் மைதானத்தை பராமரிக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இதனால், பெரிய புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  அதேபோல், பெரணி இல்லம் புல் மைதானமும் சேறும் சகதியுமாக மாறியுள்ளதால், அங்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மேலும் புல் மைதானம் சேறும் சகதியுமாக மாற வாய்ப்புள்ளது. பராமரிப்பு பணிக்காக தற்போது இவ்விரு புல் மைதானங்களும் மூடப்பட்டுள்ளன.இதனால், இவ்விரு புல் மைதானத்திற்குள்ளும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது….

The post சேறும் சகதியுமாக மாறிய புல் மைதானம்-சுற்றுலா பயணிகள் செல்ல தடை appeared first on Dinakaran.

Tags : Feedi ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED கோத்தகிரி அருகே பரபரப்பு;...