×

செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து நாமக்கல்லில் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு ஓட்டம்

நாமக்கல் : நாமக்கல்லில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. இதில் திரளானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சுற்றுலா தளமான மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியானது 28ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இதையொட்டி, நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 80க்கும் மேற்பட்ட ரோலர் ஸ்கேட்டிங் வீரர்கள், வீராங்கனைகள் பங்குபெற்ற விழிப்புணர்வு சறுக்கு ஓட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதை கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு சக்கர சறுக்கு ஓட்டத்தில் கலந்து கொண்ட வீரர், வீராங்கனைகள் அனைவரும் 44வது செஸ் ஒலிம்பியாட் சின்னமான தம்பி மற்றும் சதுரங்க படம் பொறிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள் மற்றும் சக்கர சறுக்கு (ரோலர் ஸ்கேட்டிங்) அமைப்பின் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர். நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா உள்பட ரோலர் ஸ்கேட்டிங் வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். …

The post செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து நாமக்கல்லில் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Namakal ,Chess Olympiad ,Namakkal ,Dralanor ,
× RELATED ஏடிஎம் கொள்ளையர்களிடம் இருந்து...