×

செஸ் ஒலிம்பியாட் போட்டி எதிரொலி வணிகர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை, 44வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி நடக்க உள்ளது. இதில், 2500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இப்போட்டியில், பங்கேற்க 187 நாடுகளை சேர்ந்தவர்கள் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், உணவு பாதுகாப்பு துறை சார்பில் வணிகர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி மற்றும் உரிமம், பதிவு பெறுவதற்கான ஒரு நாள் சிறப்பு முகாம் மாமல்லபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு, திருக்கழுக்குன்றம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மதுராந்தகம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் விமல விநாயகம் முன்னிலை வகித்தார். இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், 15 பேர் உரிமம் பெற பதிவு செய்தனர். முகாமில், உணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாகரன் பேசுகையில், மாமல்லபுரத்தில் ஓட்டல், ரிசார்ட், மளிகை கடை, டீ கடை, பெட்டி கடைகளுக்கு பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். டீ கடைகளில், கலப்பட தூள் பயன்படுத்தக் கூடாது. சர்வதேச செஸ் போட்டியில் பங்கேற்க 187 நாடுகளில் இருந்து வீரர்கள், பயிற்சியாளர்கள், உறவினர்கள் வருகின்றனர். இங்குள்ள, ஓட்டல், ரிசார்ட்களில் 1 அல்லது 2 முறை மட்டுமே எண்ணெயை சூடுபடுத்த பயன்படுத்த வேண்டும். அனைவரும், உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர்கள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். வரும், 21ம் தேதி உணவு பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். 2 வருடத்திற்கான, லைசென்ஸ் மற்றும் சான்றிதழ் பெற வேண்டும். லைசென்ஸ் பெற தெருவோரம் மற்றும் தள்ளுவண்டி கடைகளுக்கு ரூ100, மற்ற கடைகளுக்கு ரூ2 ஆயிரம் செலுத்த வேண்டும். அனைவரும், கையுறை, தலையுறை, முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இவைகளை, கண்காணிக்க 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, சுழற்சி முறையில் ஓட்டல்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.  முக்கியமாக, நமது நாட்டின் பெயர் கெடாத அளவில் அனைவரும் தரமான உணவு அளிக்க வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கப்பட்டது….

The post செஸ் ஒலிம்பியாட் போட்டி எதிரொலி வணிகர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Chess Olympiad ,Mamallapuram ,44th International Olympiad ,Dinakaran ,
× RELATED செஸ் ஒலிம்பியாட் 2024 இந்தியாவுக்கு 2 தங்கம்