×
Saravana Stores

செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் 800 மாணவர்களுக்கு பட்டங்கள்: துணைவேந்தர் ரவி வழங்கினார்

 

ராமநாதபுரம், மார்ச் 6: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ராஜாத்தி அப்துல்லா முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினரான காரைக்குடி அழகப்பா பல்கலையின் துணை வேந்தர் ஜி.ரவி பங்கேற்று, 800 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் முதுகலையில் 3 பேருக்கு தங்க பதக்கம் உட்பட 96 பேருக்கும், இளங்கலையில் 4 பேருக்கு தங்க பதக்கம் உட்பட 704 பேருக்கும், 54 பல்கலை தர வரிசை பெற்ற மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கி பேசியதாவது, பட்டங்களை பெறும் பட்டதாரிகள் கடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் தான் வாழ்க்கையில் எந்த துறையிலும் வெற்றி காண முடியும்.

இன்றைய போட்டி நிறைந்த உலகில் இளைஞர்கள் கணினி திறன், தகவல் தொடர்பு திறன், குழு வேலைத்திறன், தகவமைப்பு திறன் என்ற அனைத்து திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்ற போது 0.1 மில்லியன் மாணவர்கள் 20 பல்கலைகள், 500 கல்லூரிகள் இருந்தன. இன்று 45 ஆயிரம் கல்லூரிகள், 1026 பல்கலைகள் உள்ளன. மாணவர்கள் சில இலக்குகளை வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என பேசினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக அலுவலர் சாகுல்ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா செய்திருந்தனர்.

The post செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் 800 மாணவர்களுக்கு பட்டங்கள்: துணைவேந்தர் ரவி வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Ammal College of Arts and Sciences ,Ravi ,Ramanathapuram ,Chelathurai Abdullah ,Rajati Abdullah ,Ammal Matriculation School ,Vice-Chancellor ,Dinakaran ,
× RELATED பரமக்குடி அருகே ரயில் பிரேக் ஷூ கழன்று வந்து தாக்கியதில் விவசாயி பலி