×

தமிழகம் முழுவதும் 34 இடங்களில் 8,083 சாமி சிலைகளுக்கு உயர் பாதுகாப்பு ஏற்பாடு: கண்காணிப்பு கேமரா, அலாரம் பொருத்தப்படுகிறது

கோவை: தமிழகத்தில் 34 இடங்களில் 8,083 சாமி சிலைகள்  உயர் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. சிலை பாதுகாப்பு மையங்களில்  விரைவில் கண்காணிப்பு கேமரா, அலாரம் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 31,250 கோயில்கள் உள்ளன. இதில் 3,36,509 சிலைகள், விக்ரகங்கள், உலோக திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளது. இவற்றை பாதுகாக்க, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டில் 11,512  கோயில்களில் உலோக சிலை பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் 34 இடங்களில் உலோக திருமேனி பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
இதுவரை 8,083 சிலைகள் உயர் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. சிலை பாதுகாப்பு மையங்களில் விரைவில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்படும். சிலைகள், உலோக திருமேனிகள் போட்டோ பதிவுகள் பெறப்பட்டு வருகிறது. இதன் மூலமாக ஒரிஜினல் தோற்றத்தில் உள்ள போலி சிலைகள், உலோக திருமேனிகளை கண்டறிய முடியும் என இந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்தனர். ேகாயில்களில் சிலை பாதுகாப்பு மையங்களுக்கு தொட்டி பூட்டு, இரும்பு கிரில் கேட், செக்யூரிட்டி போன்றவற்றுக்காக நடப்பாண்டில் 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சிலை பாதுகாப்பு மையங்கள் அனைத்திலும் விரைவில் அலாரம் அமைக்கப்படவுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச...