×

சென்னை மாநகர பகுதிகளில் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர்நிலைகள், நீர்வழித்தட பகுதிகளில் ரூ.36 கோடியில் தற்காலிக சீரமைப்பு பணி: திருப்புகழ் கமிட்டியிடம் நீர்வளத்துறை அறிக்கை தாக்கல்

சென்னை: சென்னை மாநகரில் பருவமழையால் பாதிக்கப்பட்ட நீர்நிலைகள், நீர்வழித்தட பகுதிகளில் தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.36 கோடி ஒதுக்கீடு செய்யுமாறு திருப்புகழ் கமிட்டியிடம் நீர்வளத்துறை அறிக்கை தாக்கல்  செய்துள்ளது. கடந்தாண்டு  வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் சென்னை மாநகர் மற்றும் புறநகர்  பகுதிகளில்  பல இடங்களில் மழைநீர் வெளியேற வழியின்றி சாலைகளிலும், தெருக்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தேங்கியது. இந்த தண்ணீர் வெளியேற வழியில்லாத நிலையில், மாற்று ஏற்பாடுகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டன. இதற்கு, பல இடங்களில் கால்வாய்கள், வடிகால்கள் முறையாக இணைக்கப்படாதது தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மழைநீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காண ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர் தலைமையில் 14 பேர் கொண்ட நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்தது.  இந்த குழுவில் நகரம் மற்றும் நாட்டு திட்டமிடல் அமைப்பின் தலைமை திட்டமிடல் அதிகாரி, காலநிலை பின்னடைவு நடைமுறை உலக பல நிறுவனத்தின் இயக்குனர் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகளும் இடம்பெற்று இருந்தனர். சென்னையில் எங்கெல்லாம் மழைநீர் தேங்குகிறது, அதனை அகற்றும் வழி என்ன என்பது பற்றி வல்லுநர் குழு ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க தீர்மானிக்கப்பட்டன. இந்த  குழு சார்பில் பருவமழை காலங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளான தி.நகர், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, கொளத்தூர், மாதவரம், முடிச்சூர், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இக்குழு ஆய்வு செய்தது. அதேபோன்று இக்குழு சார்பில், மழைநீர் கால்வாய் வழியாக  நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலையாறு, கூவம், அடையாறு உள்ளிட்ட கால்வாய் பகுதிகளில் திருப்பி விடப்படுகிறது. செம்மஞ்சேரி பகுதிகளில் மழைநீர் செல்ல வழியில்லாத பகுதிகளில் புதிதாக  வடிகால்கள் அமைக்கப்படுகிறது. அதேபோன்று முடிச்சூர், தாம்பரம் பகுதிகளில் கால்வாய்களில் ஒரே இடத்தில் தண்ணீர் செல்வதை தவிர்க்க புதிதாக கால்வாய்கள் அமைத்து தண்ணீர் திருப்பி விடப்படுகிறது. கால்வாய்கள் இல்லாத பகுதிகளில் கால்வாய்களும், வடிகால்கள் சரியாக இணைக்கப்படாத பகுதிகளில் வடிகால்கள் அமைக்கவும், ஓஎம்ஆர், இசிஆர் சாலைகளில் புதிதாக கால்வாய்கள் அமைத்து மழைநீரை திருப்பி விட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நீர்வளத்துறை, பருவமழை காலங்களில் தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வசதியாக ரூ.36 கோடி ஒதுக்கீடு செய்யுமாறு இக்குழுவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. தொடர்ந்து, நீண்ட கால வெள்ள தடுப்பு திட்டத்தின் கீழ் மற்ற பணிகள் நீர்வளத்துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது என்று நீர்வளத்துறை தெரிவித்துள்ளது….

The post சென்னை மாநகர பகுதிகளில் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர்நிலைகள், நீர்வழித்தட பகுதிகளில் ரூ.36 கோடியில் தற்காலிக சீரமைப்பு பணி: திருப்புகழ் கமிட்டியிடம் நீர்வளத்துறை அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tiruppugal Committee ,
× RELATED பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை...