×

சென்னை பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த 2ம் கட்டமாக ரூ.17.57 கோடி ஒதுக்கீடு: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னை பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இரண்டாம் கட்டமாக ரூ.17.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.  இதுகுறித்து மாநகராட்சி நேற்று வெளியிட்ட அறிக்கை: சட்டப் பேரவையில் 2021-22ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை விவாதத்தின்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு  சென்னைப் பள்ளிகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும், என அறிவித்தார். அதன் அடிப்படையில், ஏற்கனவே CITIIS மற்றும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், 8 சென்னைப் பள்ளிகளில் ரூ.21.77 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் உட்பட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கு ஒப்பம் கோரப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, 6 சென்னைப் பள்ளிகளில் ரூ.17.57 கோடி  மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் உட்பட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அதன்படி சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளிக்கு ரூ.3.80 கோடி, சைதாப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.2.43 கோடி, நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.2.77 கோடி, தண்டையார்பேட்டை, பட்டேல் நகர், மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.2.88 கோடி, தண்டையார்பேட்டை பட்டேல் நகர் தொடக்கப் பள்ளிக்கு ரூ.5.69 கோடி என மொத்தம் ரூ.17.57 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.CITIIS மற்றும் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ், சென்னைப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டப்பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு சென்னைப் பள்ளிகளில் நவீன முறைகளை கொண்டு ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனும், மாணவர்களின் கற்றல் திறனும் மேம்படுத்தப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post சென்னை பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த 2ம் கட்டமாக ரூ.17.57 கோடி ஒதுக்கீடு: மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Corporation ,
× RELATED சென்னை மாநகராட்சியில் பணிபுரியும்...