×

சென்னை துறைமுகத்தில் ஒரே நாளில் 35,671 டன் பாரிட்ஸ் கையாண்டு சாதனை

சென்னை: சென்னை துறைமுகத்தில் ஒரேநாளில் அதிகபட்சமாக 35,671 டன் பாரிட்ஸ் கையாளப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சென்னை, துறைமுகம் நேற்று முன்தினம் அதிகபட்சமாக ஒரேநாளில் 35,671 டன் பாரிட்ஸ்களை (கனிம பொருள்) எம்.வி.கைலா என்ற கப்பல் மூலமாக கையாண்டது. இதற்கு முன்னதாக 17-6-2018ல் 34,795 டன் பாரிட்ஸ்கள் பிரபு சுமத் என்ற கப்பல் மூலமாக கையாளப்பட்டது. இதையடுத்து சென்னை துறைமுக அறக்கட்டளையின் தலைவர் சுனில் பாலிவால் சம்பந்தப்பட்ட முயற்சியில் தொடர்புடைய அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்’ என கூறப்பட்டுள்ளது….

The post சென்னை துறைமுகத்தில் ஒரே நாளில் 35,671 டன் பாரிட்ஸ் கையாண்டு சாதனை appeared first on Dinakaran.

Tags : Chennai Port ,CHENNAI ,Dinakaran ,
× RELATED விஷச் சாராய மரணம் – மருந்து கடைகளுக்கு கட்டுப்பாடு