×

சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பெட்டிகளை ஆய்வு செய்தார் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்..!!

சென்னை: சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகளை ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 400 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக 2023 ஆகஸ்ட்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே துறை தீவிரம் காட்டி வருகிறது. சென்னை ரயில் பேட்டி தொழிற்சாலையில் தயாராகும் புதிய வந்தே பாரத் ரயில்கள் விரைவில் இயக்கத்துக்கு வர உள்ளன. வந்தே பாரத் ரயிலில் மேம்படுத்தப்பட்ட வசதிகள்:வந்தே பாரத் ரயில்களில் 16 பெட்டிகளில் ஒரே நேரத்தில் 1,128 பேர் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியவை. வந்தே பாரத் ரயிலின் 2 பெட்டிகளில் 180 டிகிரி அளவுக்கு திருப்பிக்கொள்ளும் வகையில் நவீன சொகுசு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. விபத்துகளை தவிர்க்கும் வகையில் எதிரே வரும் ரயில்களை கண்காணிக்க ஜிபிஎஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. பயண வழித்தடத்தை உடனுக்குடன் பயணிகள் அறிய அனைத்து பெட்டிகளிலும் பெரிய மின்னணு திரை வசதி செய்யப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளில் காற்று சீராக சென்று வர அதிக திறனுள்ள கம்ப்ரஸர் காற்றில் கிருமிகளை அழிக்க புறஊதா விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன….

The post சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பெட்டிகளை ஆய்வு செய்தார் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,ICF Union ,Minister ,Ashwini Vaishnav ,Bharat ,Railway ,Chennai ICF ,Union Minister ,Bharat Railway ,Dinakaran ,
× RELATED சிறு வணிக கட்டிடங்களுக்கு கட்டட முடிவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு