×

சூடான் பிரதமர் ராஜினாமா

கார்டோம்: சூடான் நாட்டில் ராணுவப் புரட்சி ஏற்பட்டதை தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமர் அப்தல்லா ஹம்டோக் தனது பதவியை ராஜினாமா செய்தார். வடஆப்பிரிக்க நாடான சூடானில்  இடைக்கால பிரதமராக அப்தல்லா ஹம்டோக் பொறுப்பேற்றார். இவர் வரும் 2023ம் ஆண்டு ஜூன், ஜூலையில் தேர்தல் நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். இதனிடையே, கடந்த அக்டோபர் 25ம் தேதி சூடான் ராணுவம் இடைக்கால அரசை கவிழ்த்துவிட்டு நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பிரதமர் அப்தல்லா ஹம்டோக்கை கடந்த நவம்பர் மாதம் மீண்டும் பதவியில் அமர்த்தியது. இந்நிலையில், சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்டோக் தனது பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்ததாக அறிவித்தார்.இதையடுத்து ராணுவ ஆட்சி வேண்டாம் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது….

The post சூடான் பிரதமர் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Sudan ,Abdallah Hamdok ,
× RELATED சென்னையில் இருந்து சூடான் நாட்டிற்கு...