×

சுற்றுலா பயணிகளை கவரும் வண்ண வண்ண கள்ளிச்செடிகள்

ஊட்டி :  நீலகிரி  மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு  வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஊட்டி அரசு தாவரவியல்  பூங்காவிற்கு வருகிறார்கள். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பல வகையான  மலர் செடிகள், மூலிகை தாவரங்கள், பெரணி செடிகள் மற்றும் கள்ளிச் செடிகளை  கண்டு ரசித்து செல்கின்றனர். மே மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்காக  தற்போது தாவரவியல் பூங்காவை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. இதற்காக பூங்காவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மலர் செடிகள் நடவு  செய்யப்பட்டுள்ளது. மேலும், 35 ஆயிரம் தொட்டிகளில் நாற்றுகள் நடவு  செய்யப்பட்டுள்ளன. இவைகளைப் பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக  ஈடுபட்டு வருகின்றனர். பராமரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில்,  பூங்காவில் மலர்கள் இன்றி காணப்படுகிறது. கண்ணாடி மாளிகையில் மட்டுமே  மலர்களை தொட்டிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. இதனையே சுற்றுலா  பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.கண்ணாடி மாளிகையில் பிகோனியா உட்பட   பல்வேறு வகையான மலர் செடிகள் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன. இந்த தொட்டிகள்  அங்குள்ள மாடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு சுற்றுலா  பயணிகளை கவரும் வகையில் ஆங்காங்கே கள்ளிச் செடிகளும் வைக்கப்பட்டுள்ளது.  இந்த கள்ளிச் செடிகள் மலர்களை போன்று பல வண்ணங்களில் காட்சியளிக்கின்றன.  இதனால், இதனை சுற்றுலா பயணிகள் மலர்கள் என நினைத்து அதன் அருகே நின்று  புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். …

The post சுற்றுலா பயணிகளை கவரும் வண்ண வண்ண கள்ளிச்செடிகள் appeared first on Dinakaran.

Tags : Nilgiris district ,
× RELATED நீலகிரி மாவட்டம் பந்தலூரில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு