×

சுற்றுலா தொழில் நிறுவனங்கள் முறையாக பதிவு செய்ய வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல்

 

தேனி, டிச. 1: தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் நிறுவனங்கள் முறைப்படி பதிவு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் ஷஜீவனா அறிவுறுத்தி உள்ளார். தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் சார்பில், சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா பயணம் ஏற்பாட்டாளர்கள், சுற்றுலா முகவர்கள் மற்றும் சுற்றுலா போக்குவரத்து ஏற்பாட்டாளர்கள் ஆகியவற்றை நடத்தும் நிறுவனங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளின்படி சுற்றுலாத்துறை இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசாணைகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, தேனி மாவட்டத்தில் செயல்படும் சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா பயணம் ஏற்பாடுச் செய்பவர்கள், சுற்றுலா முகவர்கள் மற்றும் சுற்றுலா போக்குவரத்து ஏற்பாட்டாளர்கள் நடத்தும் நிறுவனங்கள் சுற்றுலாத்துறை இணையத்தளமான https://www.tntourismtors.comல் உடனடியாக பதிவு செய்ய வேண்டும். மேலும், இதுகுறித்த விபரங்களுக்கு தேனி சுற்றுலா அலுவலகத்தை நேரிலோ அல்லது 73977 15689 என்ற தொலைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

The post சுற்றுலா தொழில் நிறுவனங்கள் முறையாக பதிவு செய்ய வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Theni ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களை...