×

சுருக்கு மடி வலை விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிபுணர் குழு அறிக்கை தாக்கல்

புதுடெல்லி: சுருக்கு மடி வலையை வைத்து மீன் பிடிக்கும் விவகாரத்தில் நிபுணர் குழு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சுருக்கு மடி வலை தொடர்பாக தமிழகத்தின் நாகப்பட்டினம் உட்பட ஒன்பதற்கும் மேற்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில் சுருக்கு மடி வலை விவகாரத்தில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அது மூன்று மாதத்தில் அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யும் என ஒன்றிய அரசு தரப்பில் கடந்த அக்டோபர் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்த தொடர்பாக ஒன்றிய அரசு தரப்பில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, உச்ச நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில்,‘‘சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன்படிப்பதற்கு தமிழக அரசு தடை விதித்தது என்பது தொடர்பாக எவ்விடத்திலும் நாங்கள் நியாயப்படுத்த விரும்பவில்லை. எனவே, மீன்பிடி தடை காலம் இல்லாத சமயத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தலாம். அதே நேரத்தில் படகின் அளவு, என்ஜின் திறன் அளவு, உள்ளிட்டவற்று தொடர்பாக சில கட்டுப்பாடுகளை விதித்து சில வழிமுறைகளை வகுக்கலாம். மேலும், சுருக்குமடி வலை பயன்படுத்தியதால் கடல் வளம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான ஆதாரங்கள் இல்லை. அதேவேளையில், சுருக்குமடி வலை பயன்படுத்துவதால் ஏற்படும் தாக்கம் என்ன என்பது தொடர்பாக மிக ஆழந்த ஆய்வும் நடத்தப்பட வேண்டியுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post சுருக்கு மடி வலை விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிபுணர் குழு அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Narrowfold ,Supreme Court ,New Delhi ,Narrowfold Web Affair ,Dinakaran ,
× RELATED எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம்...