×

சுதானந்தபாரதி பிறந்த தின விழா

 

சிவகங்கை, மே 23: சிவகங்கையில் சிவகங்கை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கவியோகி சுதானந்த பாரதியின் 126வது பிறந்த தின விழா நடந்தது. தமிழ்ச் சங்க தலைவர் கண்ணப்பன் வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜசேகரன், குணசேகரன், தமிழ் செம்மல் பகீரதநாச்சியப்பன், தமிழ்ச்சங்க நிறுவனர் ஜவகர்கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுதானந்த பாரதி இயல் இசை நாடக விருது வழங்கினார்.

சிவகங்கை நகர் மன்றத் தலைவர் துரைஆனந்தன், துணைத் தலைவர் கார்கண்ணன், சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி நிறுவனர் சேதுகுமணன் வாழ்த்துரை வழங்கினர். சுதானந்த பாரதி இயல் விருது எழுத்தாளர் குருசாமி மயில்வாகனனுக்கும், அவர்களுக்கும் இசை விருது சுவாதிக்கும், நாடக விருது திரைப்பட இயக்குனர் சுந்தரபாண்டியனுக்கும் வழங்கப்பட்டது. சிவகங்கை தமிழ்ச் சங்க செயலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

The post சுதானந்தபாரதி பிறந்த தின விழா appeared first on Dinakaran.

Tags : Sudhanandabharati ,Sivagangai ,Sudananda Bharati ,Sivagangai Tamil Sangam ,
× RELATED கோடைகால பயிற்சி முகாம் இன்று துவக்கம்