×

சுதந்திர தின விழா கொண்டாட்டம்

தர்மபுரி,ஆக.17: தர்மபுரி விஜய்ஸ் இன்போ மீடியா கல்வி நிறுவனம் சார்பில் சுதந்திர தின விழா தர்மபுரியில் உள்ள அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.சதீஷ் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் அஜீத்குமார், வெற்றிவேல், பனிதர் ராவ், கௌதமி, அஞ்சலி,அக்சரா, கீர்த்தனா, மனீஷா, கீர்த்தி, பிரியஸ்குமார் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.இதேபோன்று பெங்களூருவில் உள்ள நிறுவனத்திலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

The post சுதந்திர தின விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Independence Day ,Dharmapuri ,Dharmapuri Vijays Info Media Education Institute ,R. Satish ,Dinakaran ,
× RELATED தருமபுரி தனியார் பள்ளியில்...