மதுரை: மதுரை கோ.புதூரை சேர்ந்த வக்கீல் ஞானேஸ்வரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு 10 வருடங்களுக்கும் மேலாக, சிறையில் உள்ள 1,600 தண்டனை கைதிகளை விடுதலை செய்வது குறித்து, கடந்த பிப்.1ல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால் இதுவரை முழுமையாக விடுவிக்கவில்லை. கடந்த 2008ம் ஆண்டில் அப்ேபாதைய திமுக அரசு 1,405 தண்டனை கைதிகளை விடுதலை செய்வதாக அறிவித்தது.
அறிவித்தபடி, ஒரே நேரத்தில் அனைவரையும் விடுவித்தது. ஆனால், தற்போது தமிழக அரசு அறிவித்துவிட்டு தேவையில்லாமல் காலம் கடத்துகிறது. எனவே, ஒரே நேரத்தில் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!