×

சீர்காழி பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு

சீர்காழி, ஜூலை 16: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே, ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே, உமையாள்பதி ஊராட்சியில், விநாயக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் குழந்தை நேய பள்ளி வோட் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 27 லட்சம் செலவில் கூடுதல் இரண்டு வகுப்பறை கட்டிடங்களையும், சமையல் கூடத்தில் குழந்தைகளுக்கு சமைக்கப்பட்ட மதிய உணவினை சாப்பிட்டு பார்த்து தரத்தினையும், விநாயககுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுடன் கலந்துரையாடியும், குழந்தைகளின் கற்றல் திறனை ஆய்வு மேற்கொண்டும், தொடர்ந்து,வடகால் ஊராட்சி வடக்கு தெருவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4.70 லட்சம் செலவில் கம்பி சாலை அமைக்கும் பணியினையும், தொடர்ந்து, கடவாசல் ஊராட்சி பொன்வெளி நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் செலவில் கம்பி சாலை அமைக்கும் பணியை என நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும், துரிதமாகவும் செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து கடவாசல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தமிழக அரசின் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றம் வளர்ச்சிப் பணிகள் குறித்து கொள்ளிடம் ஒன்றியத்தை சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள், சாலை ஆய்வாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் ஆகியோர்களுடன் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இவ்வாய்வின்போது, உதவி இயக்குனர் (தணிக்கை கோவிந்தராஜ், கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்மொழி, ரெஜினா ராணி, மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

The post சீர்காழி பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Sirkazhi, Mayiladuthurai district ,
× RELATED சீர்காழி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு சொந்த செலவில் கல்வி உபகரணங்கள்