×

சீமை கருவேல மரங்களை அகற்ற பஞ்சாயத்துகளை அறிவுறுத்த வேண்டும்: கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து, வனத்துறை, நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகளின் சார்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த அறிக்கைகளை பதிவு செய்த நீதிபதிகள், வனத்துறை மற்ற வனப்பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.நீர்நிலைகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை படிப்படியாக அல்லாமல் மொத்தமாக அகற்ற வேண்டும். இதுதொடர்பான டெண்டர் நடைமுறைகளை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும். அடுத்த விசாரணையின் போது இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சாயத்துகளுக்கும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட வேண்டும். இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து மாதந்தோறும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சீமைக் கருவேல மரங்களை அகற்றிய பின் அந்த இடங்களில் நாட்டு மரங்களை நட வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்….

The post சீமை கருவேல மரங்களை அகற்ற பஞ்சாயத்துகளை அறிவுறுத்த வேண்டும்: கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,MDMK ,general secretary ,Vaiko ,
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...