×

ஓபிஎஸ் தம்பிக்கு எதிரான வழக்கில் சிறப்பு வக்கீல் ஆஜராக தடைகோரி மனு

மதுரை: கோயில் பூசாரி தற்கொலையில் ஓபிஎஸ் தம்பிக்கு எதிரான வழக்கில், சிறப்பு வக்கீல் ஆஜராக தடை ேகாரிய வழக்கில் நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.தேனி மாவட்டம், தென்கரை டி.கல்லுப்பட்டி கைலாசநாதர் கோயில் பராமரிப்புக்குழு உறுப்பினர் லோகு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:கோயில் பூசாரியாக இருந்த நாகமுத்து, கடந்த 8.12.2012ல் தற்ெகாலை செய்து கொண்டார். முன்னதாக அவர், ஓ.ராஜா (துணை முதல்வர் ஓபிஎஸ்.சின் தம்பி) உள்ளிட்டோரே தனது தற்கொலைக்கு காரணம் எனக்கூறி கடிதம் எழுதி வைத்ததாக தென்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் ஓ.ராஜா, நான் உள்ளிட்ட பலர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தேனி நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் விசாரணை, பிறகு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் அரசின் சிறப்பு வக்கீலாக வாதிட மூத்த வக்கீல் பவானி மோகன் நியமிக்கப்பட்டார். வழக்கில் ேமலும் சிலரை சேர்க்கக்கோரிய அவரது மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. உள்நோக்கத்துடன், ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். எனவே, அவர் சிறப்பு வக்கீலாக ஆஜராகக்கூடாது. வேறொரு சிறப்பு வக்கீலை நியமிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், திண்டுக்கல் கலெக்டர், பெரியகுளம் டிஎஸ்பி, தென்கரை இன்ஸ்பெக்டர், சிறப்பு வக்கீல் பவானி மோகன், ஓ.ராஜா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தார்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஈரோட்டில் இன்று அதிகாலை கார் கவிழ்ந்து 2 இளம்பெண்கள் பலி