×

சிறுபான்மை சமுதாய மாணவர்களின் கல்விக்கு அரசு கைகொடுக்கும் என அறிவித்த முதலமைச்சருக்கு ஜவாஹிருல்லா நன்றி

சென்னை: சிறுபான்மை சமுதாய மாணவர்களின் கல்விக்கு அரசு கைகொடுக்கும் என அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்துள்ளார். 1 முதல் 8-ம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு  நிறுத்தியது.சிறுபான்மை கல்வி உதவித்தொகையை தொடர்ந்து வழங்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். உதவித்தொகை ஒருவேளை ஒன்றிய அரசு வழங்க மறுத்துவிட்டால் தமிழக அரசு வழங்கும் என முதலவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஒரு லட்சத்திற்குக் கீழ் ஆண்டு வருமானம் உள்ள சிறுபான்மை குடும்ப மாணவர்களுக்கு, 1-5 ஆம் வகுப்பு பயில்வோருக்கு மாதம் ரூ.100 மற்றும் 6-10 வகுப்பு பயில்வோருக்குச் சேர்க்கை தொகை ஆண்டுக்கு ரூ.500, பயிற்சிக் கட்டணம் மாதம் ரூ.350, மேலும் விடுதியில் தங்கி படிக்கும் மாணவருக்கு மாதம் ரூ.600, வீட்டில் இருந்து படிக்கும் மாணவருக்கு ரூ.100 என உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது. 2022-2023ஆம் ஆண்டு முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்கிட வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையினை 2022-2023 ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசு திடீரென ரத்து செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து வழங்கிட வேண்டும்29-11-2022 நாளிட்ட ஒன்றிய சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் கடிதத்தில், கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயத் தொடக்கக் கல்வி (1 முதல் 8 ஆம் வகுப்பு வரை) வழங்குவதை அரசாங்கம் கட்டாயமாக்குகிறது என்று தெரிவித்துள்ளதால், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல், பழங்குடியினர் விவகார அமைச்சகங்களின் முடிவின்படி, தற்போது 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெறத் தகுதியுடையவராகிறார்கள் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த, மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை திட்டத்தினைக் கைவிடும் முடிவை ஒன்றிய அரசு நிறுத்திவைத்து, உடனடியாக அத்திட்டத்தினை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்….

The post சிறுபான்மை சமுதாய மாணவர்களின் கல்விக்கு அரசு கைகொடுக்கும் என அறிவித்த முதலமைச்சருக்கு ஜவாஹிருல்லா நன்றி appeared first on Dinakaran.

Tags :
× RELATED பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம்...