×

சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளுக்கு மாநிலக் கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையத்தின் சார்பில் வழங்கப்பட்ட விருதுகள்

சென்னை: சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளுக்கு மாநிலக் கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையத்தின் சார்பில் வழங்கப்பட்ட விருதுகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (12.10.2022) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி சந்தித்து, டெல்லியில் 7.8.2022 அன்று மாநிலக் கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பாக செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகளின் சேவைகளைப் பாராட்டி, தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் ஆகிய கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்பட்ட 5 விருதுகளைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். டெல்லியில் 7.8.2022 அன்று மாநிலக் கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் இந்தியாவிலேயே 100 ஆண்டுகளைக் கடந்த மாநிலக் கூட்டுறவு வங்கிகளில், முதன்மையாகச் செயல்படும் மாநிலக் கூட்டுறவு வங்கிக்கான விருதினையும், தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக, அகில இந்திய அளவில், அனைத்து இனங்களிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டதற்கான விருதினையும் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு வழங்கப்பட்டது. கடன் தொகையை வசூலித்தல் மற்றும் வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகை ஆகியவற்றின் நிலைத்தன்மையான செயல்பாடுகளுக்கான விருதினை தமிழ்நாடு கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிக்கும், நூறு ஆண்டுகளைக் கடந்து சேவையாற்றி வருகின்ற மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளுக்கான விருதுகளை சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளுக்கும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அ. சண்முகசுந்தரம், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

The post சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளுக்கு மாநிலக் கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையத்தின் சார்பில் வழங்கப்பட்ட விருதுகள் appeared first on Dinakaran.

Tags : National Network of State Co-operative Banks ,Tamil Nadu Co-operative Banks ,Chennai ,Tamil Nadu Cooperative Banks ,National Network of State Cooperative Banks ,Tamil ,Nadu ,Tamilnadu Cooperative Banks ,Dinakaran ,
× RELATED சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில்...