×

சிறந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு பாராட்டு

 

 

சேலம், மே 27: சேலம் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் சார்பில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தினவிழா, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் சேவையின் மண்டல ேமலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சேலம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் நந்தினி கலந்து கொண்டு, சிறந்த டிரைவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதில் சூரமங்கலம் காவல்நிலைய ஆம்புலன்ஸ் டிரைவர் அசோக்குமார், நங்கவள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் டிரைவர் அஜித்குமார் உள்ளிட்டோர் சிறந்த டிரைவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை பெற்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மனோஜ்குமார், ராஜேஷ்குமார், அருண் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post சிறந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Salem ,108 Ambulance Drivers Day ,Salem Collectorate ,Salem District 108 Ambulance Administration ,Jayakumar ,Zonal ,108 Ambulance Service ,Dinakaran ,
× RELATED பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்