×

முட்டை விலை 350 காசாக உயர்வு

நாமக்கல்: முட்டை விலை 350 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணயக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், முட்டை விலையில்  மேலும் 10 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 350 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. மற்ற  மண்டலங்களில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் உற்பத்தி குறைந்துள்ளது.  


ஆனால், விற்பனை அதிகரித்துள்ளது. இதனால், விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். 10 நாளில்  முட்டை விலை 25 காசு உயர்ந்துள்ளது. அதேபோல், ஒரு கிலோ முட்டைக்கோழி ரூ68 ஆகவும், ஒரு கிலோ கறிக்கோழி ரூ72 ஆகவும் விலை  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை விபரம் வருமாறு(காசுகளில்): ஐதராபாத் 313, விஜயவாடா 321,  பர்வாலா 342, மும்பை 362, மைசூர் 344, பெங்களூரு 340, கொல்கத்தா 373, டெல்லி 335.

Tags :
× RELATED அமெரிக்காவின் பெடரல் வங்கி 0.5% வட்டி விகிதம் குறைப்பு..!!