×

சினிமா சண்டை காட்சியில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் டம்மி என விழிப்புணர்வு வெளியிட கோரிய வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளின் போது ஆயுதங்கள் மற்றும் ரத்தம் குறித்த எச்சரிக்கை வாசகங்களை இடம்பெற உத்தரவிட கோரிய  வழக்கு வாபஸ் பெறப்பட்டதைடுயத்து, மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் கோபிகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,   இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சினிமாவில் வன்முறை காட்சி வரும்போது ‘‘இதில் பயன்படுத்தப்படும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பேப்பரில் செய்யப்பட்டவை”, ‘‘சிவப்பு நிறத்தில் சிந்துவது ரத்தமல்ல, வெறும் கலர் பவுடர் தான்” போன்ற வாசகங்கள் இடம்பெற உத்தரவிட வேண்டும்.புகைப் பிடிப்பது மற்றும் மது அருந்துவது தொடர்பான காட்சிகள் வரும்போது  விழிப்புணர்வு வாசகங்களை போன்று சண்டை காட்சிகளிலும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, திரைப்பட காட்சிகளை பார்த்து தான் பள்ளி மாணவர்கள் தங்கள் புத்தக பைகளில் கத்தி போன்ற ஆயுதங்களுடன் வருவதாக மனுதாரர் தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், உங்கள் குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் உள்ளது. வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கு தொடரக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போகிறோம் என்று எச்சரித்தனர். இதையடுத்து மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ள  மனுதாரர் அனுமதி கோரினார். இதை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்….

The post சினிமா சண்டை காட்சியில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் டம்மி என விழிப்புணர்வு வெளியிட கோரிய வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை...