×

சாலைகளை மறித்து போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை?…ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: ‘வேளாண் சட்டத்திற்கு எதிராக நெடுஞ்சாலைகளை மறித்து போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?’ என்று ஒன்றிய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.  வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி எல்லையில் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்த சட்டங்களை ஆராய்வதற்காக 4 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரியில் அமைத்தது.  இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த வழக்குகள் நீதிபதி எஸ்.கே.கவுல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘போராட்டம் நடத்துவது விவசாயிகளின் உரிமை. ஆனால், அதற்காக மக்கள் பயன்படுத்தக் கூடிய நெடுஞ்சாலைகளை அவர்கள் எப்படி நீண்ட காலமாக அடைத்து வைக்க முடியும்? இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இந்த பிரச்னையை தீர்க்க, ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? விவசாயிகளின் சாலை மறியல் போராட்ட விவகாரத்தில் யாரை வழக்கில் சேர்த்தால் உதவியாக இருக்கும் என்பது பற்றிய விரிவான புதிய மனுவை ஒன்றிய அரசு தாக்கல் செய்ய வேண்டும்,’ என்று கூறி, விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்….

The post சாலைகளை மறித்து போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை?…ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,State of the Union ,New Delhi ,Dinakaran ,
× RELATED கனிம வளங்கள் தொடர்பான உரிமைகளுக்கு...