×

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் ஒருநாள் போலீஸ் அதிகாரியாக கல்லூரி மாணவி நியமனம்

புதுச்சேரி: உலகம் முழுவதும்மகளிர் தினம் வித்தியாசமான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி காவல்துறை சார்பில் பாரதிதாசன் அரசு கல்லூரி மாணவி நிவேதா இன்று ஒருநாள் முத்தியால்பேட்டை காவல்நிலைய அதிகாரியாக நியமித்துள்ளனர். NCC மாணவியான நிவேதா NCC உடையில் முத்தியால்பேட்டை காவல்நிலையம் வந்தார். அப்போது காவல்  ஆய்வாளர் கார்த்திகேயன், உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் ஆகியோர் பூங்கோத்து கொடுத்து வரவேற்று, காவல்நிலைய அதிகாரி இருக்கையில் அமரவைத்தனர். பின்னர் காவலர்களுக்கான ரோல் காலில் பங்கேற்று இன்றைய காவல்த்துறை பணிகள் என்ன என்பதை தெரிந்துகொண்டார். பின்னர் காவல்நிலையத்தில் உள்ள அறைகளை பார்வையிட்டார். இதனை அடுத்து காவல்நிலையத்தில் உள்ள ஆவணங்களை அவர் ஆய்வு செய்தார். பின்னர் காவல்துறை வாகனத்தில் ஏறி புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல்நிலையதிற்குட்பட்ட முக்கிய சந்திப்புகளில் உள்ள போக்குவரத்து நெரிசலை சரிசெய்தார். இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை விசாரித்து நடவடிக்கை மேற்கொண்டார். மகளிர் தினத்ததன்று தன்னை ஒருநாள் போலீஸ் அதிகாரியாக நியமித்த புதுச்சேரி காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன், இதனை பெருமையாக நினைக்கிறேன். இன்று முழுவதும் போலீஸ் பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது என கல்லூரி மாணவி நிவேதா தெரிவித்தார். …

The post சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் ஒருநாள் போலீஸ் அதிகாரியாக கல்லூரி மாணவி நியமனம் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,International Women's Day ,Women's Day ,Bharathidasan Government ,Puducherry Police ,
× RELATED புதுச்சேரி நீதிமன்றத்தில் திருமாவளவன் ஆஜர்..!!