×

சர்வதேச நிதி கிடைப்பதில் தாமதம் இலங்கைக்கு மேலும் ரூ.3,750 கோடி கடன்: இந்தியா தாராளம்

கொழும்பு: சர்வதேச நிதியத்தின் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், எரிபொருள் வாங்க இலங்கைக்கு மேலும் ரூ.3,750 கோடி கடனை இந்தியா வழங்க உள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கை, அதன் அந்நிய செலாவணி கையிருப்பு கடுமையாக சரிந்ததால், எரிபொருள், எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாமல் தவிக்கிறது. ஏற்கனவே இலங்கைக்கு இந்தியா ரூ.7,500 கோடி நிதி உதவிகளை அறிவித்து, எரிபொருள், உணவுப் பொருட்களை அனுப்பி வைத்தது. இலங்கை திருப்பி செலுத்த வேண்டிய ரூ.3000 கோடி கடனுக்கான அவகாசத்தையும் நீட்டி உள்ளது. ஆனாலும், இந்த உதவிகள் போதவில்லை என்பதால் இந்தியா கூடுதலாக கடன் உதவி வழங்க வேண்டும் என இலங்கை அரசு வலியுறுத்தியது.இந்நிலையில், எரிபொருள் வாங்க மேலும் ரூ.3,750 கோடி கடனை இந்தியா வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக இலங்கை நிதி அமைச்சர் அலி சப்ரி கூறி உள்ளார். அவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க ரூ.30,000 கோடி நிதி தேவைப்படுகிறது. இதற்காக உலக வங்கி, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். அடுத்த 6 மாத காலம் சிரமமானது. சர்வதேச நிதியத்திடம் இருந்து நிதி உதவி கிடைக்க தாமதமாகிறது. இந்நிலையில், எரிபொருள் கொள்முதல் செய்ய இந்தியா மேலும் ரூ.3,750 கோடி கடன் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. அதே சமயம், மேலும் ரூ.7,500 கோடிக்கான கடன் உதவி செய்யவும் பரிசீலிப்பதாக கூறி உள்ளது,’’ என்றார்.* இடைக்கால அரசு ராஜபக்சே மறுப்பு இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக பிரதமர் மகிந்தா ராஜபக்சே மற்றும் அதிபர் கோத்தபய ராஜபக்சே இருவரும் பதவி விலக கோரி பொதுமக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் போர்க்கொடி தூக்கி உள்ளனர். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இடைக்கால அரசை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுகுறித்து மகிந்தா ராஜபக்சே கூறுகையில்,​இடைக்கால அரசாங்கங்களால் என்ன பயன்? தேவை இருந்தால் இடைக்கால அரசு எனது தலைமையில் மட்டுமே நடக்க வேண்டும்’ என்று கூறி உள்ளார்….

The post சர்வதேச நிதி கிடைப்பதில் தாமதம் இலங்கைக்கு மேலும் ரூ.3,750 கோடி கடன்: இந்தியா தாராளம் appeared first on Dinakaran.

Tags : Sri ,Lanka ,India ,Colombo ,
× RELATED இலங்கை செல்ல இன்று முதல் விசா தேவையில்லை