×

சட்டவிரோதமாக 36 மாடுகளை ஏற்றி சென்ற ஓட்டுநர் கைது

திண்டிவனம், ஏப். 10: ஆந்திராவிலிருந்து கேரளாவிற்கு 36 மாடுகளை ஏற்றிக்கொண்டு நேற்று லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஒலக்கூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக சென்ற அழகிய பாரத இந்து மகாசபை கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சபரிராஜன்(35), என்பவர் ஒலக்கூர் காவல் நிலையத்தில் சட்டத்திற்கு புறம்பாக கனரக வாகனத்தில் அதிக அளவில் மாடுகளை ஏற்றிச் செல்வதாக புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் சாரம் அருகே போலீசார் மாடுகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை மடக்கி பிடித்து, காவல் நிலையம் எடுத்து சென்றனர். பின்னர் கனரக வாகனத்தில் போதுமான இடைவெளி, உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்டவை இல்லாமல் ஏற்றி சென்றதால், லாரி ஓட்டுநர் திண்டுக்கல் மாவட்டம் அரசப்பிள்ளை பட்டியை சேர்ந்த பொன்னுசாமி மகன் வெங்கடேசன்(62), என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்த போலீசார், லாரியில் ஏற்றிச் சென்ற மாடுகளை விழுப்புரம் கால்நடை துயர் தடுப்பு துறையிடம் ஒப்படைத்தனர்.

The post சட்டவிரோதமாக 36 மாடுகளை ஏற்றி சென்ற ஓட்டுநர் கைது appeared first on Dinakaran.

Tags : Andhra ,Kerala ,Chennai Trichy ,
× RELATED ஆந்திர மாநிலம் நெல்லூரில் பள்ளிவேன் மீது லாரி மோதியதில் 15 பேர் படுகாயம்..!!