×

கோயில்களில் சாமி தரிசனம்: காஞ்சி. கலெக்டர் வேண்டுகோள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:  காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வு அறிவிக்கப்பட்டு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் ஆடி மாதம் தொடங்கியுள்ளது. இந்நிலையில், அம்மன் மற்றும் முருகன் கோயில்களுக்கு வழிபாடு  செய்ய செல்லும் பக்தர்கள் அரசு வழிக்காட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தவறினால் 3வது அலை ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிடும். திருக்கோயில்களில் வழிபாடு செய்ய தடை ஏதுமில்லை. ஆனால் கோயில்களில் திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்குகள் நடத்த அரசு தடை வித்துள்ளதால், கோயில்களில் அதிககூட்டம் கூடாமல் சாமி தரிசனம் செய்யவேண்டும். அரசு வழிக்காட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்கவேண்டும். தவறும் நபர்கள் மீது அபராதம் விதித்து வழக்குப்பதிவு செய்யப்படும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார். …

The post கோயில்களில் சாமி தரிசனம்: காஞ்சி. கலெக்டர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Sami ,Kanji ,Kanchipuram ,Kanchipuram District ,Collector ,Arthi ,Kanchipuram District Collector ,Dinakaran ,
× RELATED காஞ்சி தெற்கு மாவட்ட செயற்குழு...