×

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு மஞ்சப்பை வழங்க புதிய இயந்திரம்

 

அண்ணாநகர், ஜூன் 25: தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடைவிதிக்கப்பட்டு, அதற்கு மாற்றாக மஞ்சப்பை திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியது. இதையடுத்து, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தானியங்கி மஞ்சப்பை விநியோக இயந்திரங்களை தமிழக அரசு நிறுவியுள்ளது. இந்த இயந்திரத்தில் ரூ.5 நாணயம் செலுத்தினால் மஞ்சப்பை கிடைத்துவிடும். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்படி, கோயம்பேடு மார்க்கெட்டில் மஞ்சப்பை இயந்திரம் அமைக்கப்பட்டது.

இந்த இயந்திரம் பழுதானதால், கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் பிளாஸ்டிக் பைகள் விற்பனை தலைதூக்கியது. இதனால் மஞ்சப்பை இயந்திரம் வழங்கும் கருவியை பழுதுநீக்க வேண்டும் என்று வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.  இந்நிலையில், மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பழுதடைந்த மஞ்சப்பை இயந்திரத்தை அகற்றிவிட்டு, நேற்றுமுன்தினம் புதிய மஞ்சப்பை இயந்திரத்தை அமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

The post கோயம்பேடு மார்க்கெட்டிற்கு மஞ்சப்பை வழங்க புதிய இயந்திரம் appeared first on Dinakaran.

Tags : Coimbed Market ,Annanagar ,Tamil Nadu government ,Tamil Nadu ,Government of Tamil Nadu ,
× RELATED கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு