×

கோயம்பேடு, நெற்குன்றம் பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைந்தது

அண்ணாநகர்: சென்னையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, கோயம்பேடு நெற்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தது. இப்பகுதிகளில் 80 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, சுகாதாரத்துறை அலுவலர் உஷா, சுகாதார ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் ஊழியர்கள் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு  தினமும் தேவையான மருந்து மாத்திரைகள் கொடுத்து வந்தனர். மேலும், அப்பகுதிகளில் தூய்மைப்பணியை தீவிரமாக மேற்கொண்டனர். எனவே, தற்போது அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22ஆக குறைந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு கொரோனா பரிசோதனை தீவிரபடுத்தப்பட்டுள்ளது, கோயம்பேடு, நெற்குன்றம் பகுதிகளில் இதுவரை சுமார் 2,800 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது….

The post கோயம்பேடு, நெற்குன்றம் பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Coimbatu ,Natuurum ,Annanagar ,Chennai ,Coimbatore Valley ,Coimbed, Nedulam ,Dinakaraan ,
× RELATED நாளை விசாரணைக்கு ஆஜராக டிடிஎஃப் வாசனுக்கு போலீஸ் சம்மன்