×

கோடனூரில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

திருவாடானை, ஆக. 17: திருவாடானை அருகே கோடனூர் ஊராட்சிக்குட்பட்ட கோடலூர் மற்றும் கிளியூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமங்களளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்ட்ட குடிநீர் கடந்த ஒரு மாத காலமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருவாடானை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும், கோடனூர் ஊராட்சி நிர்வாகத்திற்கும் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

நேற்று இக்கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் உட்பட சுமார் 70க்கும் மேற்பட்டோர் தள்ளுவண்டி மூலம் காலிக்குடங்களுடன் வந்து குடிநீர் வழங்காததைக் கண்டித்து திருவாடானை – ஓரியூர் செல்லும் நெடுஞ்சாலையில் கோடனூர் பேருந்து நிறுத்தம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து திருவாடானை இன்ஸ்பெக்டர் (பொ) விமலா தலைமையிலான போலீசார், திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) ஆரோக்கியமேரி சாரால், காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகள் மற்றும் கோடனூர் ஊராட்சி மன்றத்தலைவர் காந்தி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகள் ஒரு சில தினங்களுக்குள் குடிநீர் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post கோடனூரில் குடிநீர் கேட்டு சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Kodanur ,Thiruvadanai ,Kodalur ,Cleur ,Kodanur Panchayat ,
× RELATED மழை வேண்டி பொங்கல் வைத்த பக்தர்கள்