×

கொள்ளிடம் ஆற்றில் தொடரும் வெள்ளபெருக்கால் கிராம மக்கள் தவிப்பு; நோய் தொற்று பரவும் அபாயம்- சுகாதார அதிகாரிகள் ஆய்வு

மயிலாடுதுறை: கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கு காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த கிராம மக்கள் ஒரு வாரங்கள் ஆகியும் வீடுகளுக்கு செல்ல முடியாமல் முகாம்களில் பரிதவித்து வருகின்றனர். தமிழகத்தில் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி, பவானி, வைகை, தாமிரபரணி போன்ற முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அவற்றின் கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொற்று நோய் பரவும் ஆபத்து உள்ளதை அடுத்து அரசின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாதல்படுகை, முதலைமேடு, மேடுதிட்டு, வெள்ளமணல் உள்ளிட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அப்பகுதி மக்களுக்கு மருத்துவ முகாம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அங்கு ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை இயக்குநர் திரு.செல்வ விநாயகம் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கரையோர உள்ள ஆராம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்பட உத்தரவிட்டுள்ளதாக கூறினார். இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் தஞ்சை அருகே உள்ள  கீழணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,42,000 கன அடியிலிருந்து 1,59,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரனமாக கெள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணிதுறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் 6-வது நாளாக மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்தியூர் அருகே பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 457 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,552 கன அடியிலிந்து 7100 கன அடியாக குறைந்துள்ளது. இதன் காரணமாக இடுக்கி அணைக்கு வினாடிக்கு 5986 கன அடி தண்ணீரும் தமிழகத்திற்கு 2194 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது….

The post கொள்ளிடம் ஆற்றில் தொடரும் வெள்ளபெருக்கால் கிராம மக்கள் தவிப்பு; நோய் தொற்று பரவும் அபாயம்- சுகாதார அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kollidam River ,Mayiladuthurai ,Mayiladuthurai district ,
× RELATED திருச்சியில் சோகம் கொள்ளிடம் தடுப்பணையில் குளித்த மாணவன் பலி