×
Saravana Stores

கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு: இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என தகவல்..!

பொகடா: கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரித்துள்ளது. தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக ரிசரால்டா மாகாணத்தில் மிகப்பலத்த மழை கொட்டியது. இப்பகுதியில் உள்ள நதிகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டி ஓடுகிறது. இந்நிலையில், கனமழையால் பியூப்லோ ரிக்கோ என்ற மலை பகுதியில் மழையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. அப்போது மலைப்பாதை வழியே சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்தை டன் கணக்கான பாறைகளும், மண்ணும் மூடிவிட்டன. தகவலறிந்து வந்த பேரிடர் மேலாண்மை படை பாறைகளை அகற்றி மீட்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். இருப்பினும் அவர்களால் 9 பேரை மட்டுமே மீட்க முடிந்தது.பேருந்தில் பயணித்தவர்களில் 33 பேர் உடல் நசுங்கியும், மூச்சு திணறியும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 33 பேரில் 5 பேர் சிறுவர்கள் ஆவர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 9 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்தில் பயணித்தோரின் மொத்த எண்ணிக்கை தெரியாததால் இடிபாடுகளில் வேறுயாரும் சிக்கியுள்ளார்களா என மீட்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.      …

The post கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு: இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என தகவல்..! appeared first on Dinakaran.

Tags : Colombia ,Bogota ,South American ,Dinakaran ,
× RELATED ‘வெனிசுலா மாநாட்டில் பங்கேற்க இந்திய எம்பிக்கு அனுமதி மறுப்பதா?’