×

கொரோனா தடுப்பு நடவடிக்கை: முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து மத்திய அமைச்சருடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர்களுடன், பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். 
மருத்துவமனையில் படுக்கை வசதிகள் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மனதில் அச்சம் எழுந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,38,439 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 69 லட்சத்து 51 ஆயிரத்தை தாண்டியது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,38,439 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 69 லட்சத்து 51 ஆயிரத்தை தாண்டியது.

The post கொரோனா தடுப்பு நடவடிக்கை: முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து மத்திய அமைச்சருடன் பிரதமர் மோடி ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Union Minister ,Delhi ,Modi ,Union Ministers ,Corona ,Dinakaran ,
× RELATED நாட்டில் இருந்து வறுமையை முற்றிலும்...