×

கொடநாடு விவகாரம்; கோவை மணல் சப்ளையர்: ஓ.ஆறுமுகசாமியிடம் விசாரணை

கோவை: நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பங்களாவில் 4 ஆண்டிற்கு முன் கொள்ளை நடந்தது. இதை தடுக்க முயன்ற எஸ்டேட் செக்யூரிட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நேற்று, மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி சுதாகர் தலைமையிலான போலீசார் மணல் சப்ளையர் ஓ.ஆறுமுகசாமியின் மகன் செந்தில்குமார் (48) என்பவரிடம்  கோவை போலீஸ் பயிற்சி மைய வளாகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.ஓ.ஆறுமுகசாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது குவாரிகளில் மணல் எடுக்கும் ஒப்பந்தம் பெற்றிருந்தார். மணல் தொழிலில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார். மணல் சப்ளைக்கு பின்னர் ஓ.ஆறுமுகசாமியின் சொத்துக்கள் பல மடங்கு பெருகியது. இதை தொடர்ந்து ஆறுமுகசாமி ‘செந்தில் குரூப் ஆப் கம்பெனி’ என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்களை துவக்கினார். கிரீன் பவர், பேப்பர், சிமென்ட், புட் புராடக்ட், சினிமா தியேட்டர், ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகின்றனர். கொடநாடு கொலை நடந்த 2017ம் ஆண்டு சென்னை சிஐடி காலனி ஷைலி நிவாஸ் அபார்ட்மென்ட்டில் செந்தில் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன . அதன் அடிப்படையில் செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், இன்று காலை 11 மணி முதல் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில்  மணல் சப்ளையர் ஓ.ஆறுமுகசாமி, மகன் செந்தில்குமார் ஆகிய இருவரிடமும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post கொடநாடு விவகாரம்; கோவை மணல் சப்ளையர்: ஓ.ஆறுமுகசாமியிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kodanadu ,Coimbatore ,O. Arumugasamy ,Chief Minister ,Jayalalithaa ,Koda Nadu Estate, Nilgiri District.… ,Koda Nadu ,Dinakaran ,
× RELATED இயக்குநர் பார்த்திபன் அளித்த...