×

கொடநாடு எஸ்டேட் வங்கி கணக்கு முடக்கம்: வருமான வரித்துறை நடவடிக்கையா ?

ஊட்டி: கொடநாடு எஸ்டேட் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளதால், தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோத்தகிரி அருகே கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் மற்றும் கர்சன் எஸ்டேட் ஆகியவை உள்ளன. இந்த எஸ்டேட்டில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 1991 முதல் 1996 வரை ஆட்சியில் இருந்தபோது ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்த வழக்கில், கொடநாடு எஸ்டேட்டும் அடங்கும். இதனால், அமலாக்கத்துறை இந்த சொத்தை முடக்கியது. எனினும், இந்த எஸ்டேட்டில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு வழக்கம்போல், ஊதியம் வழங்கவும் மற்றும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பவும் இந்த எஸ்டேட் வருமானத்தில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என அனுமதியளித்திருந்தது. இதனால், கடந்த ஓராண்டிற்கு மேலாக இந்த எஸ்டேட் வருமானத்தில் இருந்து தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 5ம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், இம்மாதம் இதுவரை ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. மேலும், இந்த எஸ்டேட்டின் வங்கி கணக்கு ஈளாடா பகுதியில் உள்ள பேங்க் ஆப் இந்தியாவில் உள்ளது. ஆனால், அந்த வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக வருமான வரி கணக்கை முறையாக எஸ்டேட் நிர்வாகம் காட்டாத நிலையில், வங்கி கணக்கை வருமான வரித்துறை முடக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. …

The post கொடநாடு எஸ்டேட் வங்கி கணக்கு முடக்கம்: வருமான வரித்துறை நடவடிக்கையா ? appeared first on Dinakaran.

Tags : Kodanad ,Koda Nadu Estate Bank ,Kotagiri ,Koda ,Dinakaran ,
× RELATED கொடநாடு சம்பவ எதிரிகளுக்கு...