×

கேரளாவில் கணவன் வெட்டிக் கொலை: எம்எல்ஏ விதவையானது அவருடைய தலைவிதி; மாஜி அமைச்சர் பேச்சால் பேரவையில் அமளி

திருவனந்தபுரம்: பெண் எம்எல்ஏ.க்கு எதிராக அவதூறு கருத்து கூறிய மார்க்சிஸ்ட் எம்எல்ஏ மணிக்கு எதிராக  எதிர்க்கட்சிகள் அமளியில்  ஈடுபட்டன. கேரள  மாநிலம், கோழிக்கோடு அருகே உள்ள ஒஞ்சியம்  பகுதியை சேர்ந்தவர்   சந்திரசேகரன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய பொறுப்பில்  இருந்தவர், சில வருடங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து விலகி புரட்சி  மார்க்சிஸ்ட் என்ற புதிய கட்சியை தொடங்கினார். இந்நிலையில், 7  வருடங்களுக்கு முன்பு சந்திரசேகரன் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக மார்க்சிஸ்ட்  கட்சியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் கைது  செய்யப்பட்டனர். இந்நிலையில், கேரளாவில் கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவை  தேர்தலில் சந்திரசேகரனின் மனைவி ரமா, காங்கிரஸ் கூட்டணி ஆதரவுடன் வெற்றி பெற்றார். நேற்று முன்தினம் கேரள சட்டசபையில் முன்னாள் அமைச்சரும், மார்்க்சிஸ்ட் எம்எல்ஏவுமான எம்.எம். மணி பேசும்போது, ‘ரமா விதவையானது அவரது தலைவிதி, அதற்கு எங்கள்  கட்சி பொறுப்பில்லை,’ என்று பேசினார். இதற்கு காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.  நேற்று காலை சட்டசபை தொடங்கியதும் மணியை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆளுங்கட்சி உறுப்பினர்களும் பதிலுக்கு கோஷமிட்டதால் கடும் அமளி  ஏற்பட்டது.  இதனால், நாள் முழுவதும் சபை  ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன். மணி மன்னிப்பு கேட்கும் வரையில் போராட்டம் தொடரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் கூறினார்….

The post கேரளாவில் கணவன் வெட்டிக் கொலை: எம்எல்ஏ விதவையானது அவருடைய தலைவிதி; மாஜி அமைச்சர் பேச்சால் பேரவையில் அமளி appeared first on Dinakaran.

Tags : Kerala ,MLA ,Amali ,Thiruvananthapuram ,Marxist ,Dinakaran ,
× RELATED கேரளாவில் நகரசபை அலுவலகத்தில்...